Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அங்கு சென்று வருவதற்குள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் தெற்கு வீதி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் செல்வகுமார் தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து செல்வகுமாரின் பெற்றோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றனர். அதன்பின் தமிழ்ச்செல்வி நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தன் மகனுடன் அங்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அதன்பின் தாலுகா காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |