ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தனியார் வங்கியான YES பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கியதால் இதன் முழு நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு விதித்து , பின்னர் தளர்த்திக் கொண்ட நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரில் எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.