எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 453 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி.
ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது .
ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால் ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது . மேலும் ரூ.550 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் 120 நாட்களில் எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்ற கால அவகாசத்தை நிர்ணயித்தும் ரிலையன்ஸ் செலுத்ததால் எரிக்ஸன் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது .
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் அம்பானி குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வாரத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் இல்லையென்றால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது . உச்சநீதிமன்ற விதித்த நாலு வரண்களின் கடைசி நாள் வருகின்ற செவ்வாய்கிழமை (19-ம் தேதிக்குள்) எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் அனில் அம்பானி வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் உருவாகும் .