Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசால்ட்டா உலா வருது…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் இருக்கும் அரசு மருத்துவமனை, மார்க்கெட் போன்ற முக்கிய பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கால்நடைகள் சாலைகளில் அங்கும், இங்கும் உலா வருவதால் அடிக்கடி விபத்துக்கள் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஆனால் தற்போது மீண்டும் கால்நடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறது. எனவே கால்நடைகள் சுற்றி வருவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |