Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் கலக்க தயாராகும் அனிருத்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட் திரைபடத்திற்கு இசையமைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இவர் தனது திறமையான இசைக் கலையை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை அனிருத் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்திற்கு
ஹிந்தி சினிமாவில் இசை அமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கம் புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |