“சியான் 60” படத்திலிருந்து அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார். மேலும் நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு எந்த காரணமும் சொல்லாமல் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் அனிருத் இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி அனிருத் ஏற்கனவே பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் இப்படத்திற்கு அவரால் இசை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சியான் 60 படத்திலிருந்து விலகியுள்ளார். ஆகையால் அடுத்ததாக இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.