விக்ரமின் “சீயான் 60” படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் “சியான் 60” படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார். மேலும் சிம்ரன் மற்றும் வாணி போஜன் என இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்த அனிருத் தற்போது இதில் இருந்து விலகியுள்ளார். அதற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Yes… It's A Santosh Narayanan Musical!!
Welcome to the Gang @Music_Santhosh
Thanks @anirudhofficial for your understanding & Support … #Chiyaan60 shoot starts from TODAY…
Need all your Support, Blessings and Love 🙏
More updates to follow…. pic.twitter.com/ZqmFKU6J86
— karthik subbaraj (@karthiksubbaraj) March 10, 2021