Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத் செய்த செயல்…. பாராட்டு மழை பொழியும் ரசிகர்கள்…. என்னன்னு பாருங்க…!!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் செயலை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார். மேலும் அப்படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறிடி என்ற பாடம் வேர்ல்டு ட்ரெண்டிங் ஆனது.

இதைதொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் அனிருத் இசை அமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் அசத்தி வருகிறார். குறிப்பாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அனிருத் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் போது ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பாடி கொடுத்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அவ்வாறு அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே பயங்கர ஹிட் ஆகியுள்ளது. இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் அனிருத்தை மனமாரப் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |