Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயரம்… பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார்.

ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா சம்பத்தின் தந்தை ஆர்சி சம்பத் சற்றுமுன் காலமானார். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தகவல் வந்துள்ளது. அனிதா சம்பத்தின் தந்தை காலமான செய்தி அறிந்து சமூகவலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |