Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஆரி… வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் அனிதாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையாகவும், மன உறுதியுடனும் விளையாண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது .

Aari Surprise visit to biggbosstamil4 actress பிக்பாஸ் நடிகைக்கு ஆரி சர்ப்ரைஸ்

இந்நிலையில் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னுடைய சக போட்டியாளரான அனிதா சம்பத்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் . மேலும் அவரது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார் . தற்போது அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட அனிதா ‘ஆரியுடன் குடும்பத்தினர் நேரம் செலவிட்டோம் . வருகைக்கு நன்றி ஆரி. இந்த சகோதர பிணைப்பு எப்போதும் தொடரும் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |