மலைப் பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவை கடந்தது. அப்போது லாரியை திருப்ப முடியாமல் டிரைவர் அங்கேயே நிறுத்தி விட்டார். இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.
அதன்பின் டிரைவர் ஒருவர் அந்த லாரியை லாவகமாக கொண்டை ஊசி வளைவில் இருந்து திருப்பினார். இதனைதொடர்ந்து சுமார் 2 மணி பாதிக்கப்பட்ட போக்குவரத்து சீரானது. இவ்வாறு திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய தீர்வு இல்லையா என்று பொதுமக்கள் புலம்பி சென்றனர்.