Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சம்பளத்தை குறைக்காதீங்க…. அஞ்சல் ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கோட்ட செயலாளர் ஞான பாலசிங் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அந்த போராட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் கூறுவதாவது,  இலக்கு என்ற பெயரில் நடக்கும் அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், சம்பளத்தை குறைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிய ஊழியர்களுக்கு தாமதமின்றி நிரந்தர பணி ஆணை வழங்கி அவர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் எனவும், இடமாறுதல் விரைந்து வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் நடராஜன், ஐயப்பன், முருகேசன், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |