ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வுக்குப்பின் என்ன செய்ய போகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஜெர்மனியின் முதல் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்க்கல் 16 ஆண்டு கால பதவிலிருந்து ஓய்வு பெறுகிறார். ஏஞ்சலா தற்போது ஓய்வு பெற்றாலும், புதிய அதிபர் பதவியேற்கும் வரை அவர்தான் நாட்டை கவனிக்க போகிறார். அதன்பின் ஏஞ்சலா மெர்க்கல் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியை ஊடகங்கள் அவரிடம் எழுப்பியுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது “இவ்வளவு காலம் நான் ஏற்ற பொறுப்புகளை வேறொருவர் ஏற்க உள்ளதால், நான் கொஞ்சம் புத்தகங்களை வாசிக்க போகிறேன். எனது கண்கள் களைத்த பின் சற்று ஓய்வு எடுக்க போகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏஞ்சலாவிற்கு ஓய்ஊதியமாக மாதம் 15,000 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஓய்வுக்குப்பின் நாடாளுமன்ற வளாகத்தில் தனி அலுவலகம் ஒதுக்கி பாதுகாப்பு அதிகாரிகள், 2 ஆலோசகர் உட்பட ஒரு செயலரும் அனுமதிக்க உள்ளனர். மேலும் அவருக்கு அரசு வாகனம் ஒன்று ஓட்டுநருடன் வழங்க உள்ளது. முன்னாள் அதிபர்கள் சிலர் ஓய்வுக்கு பின் பேச்சாளராக சிறந்த வருவாய் கண்டுள்ளனர். இதனால் ஏஞ்சலாவும் அவ்வாறு செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.