Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் பெரியசாமிக்கு கொரோனாவிற்கான சிகிச்சையை  அளித்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு மருத்துவர் அளித்த சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.இதனையடுத்து அவரது உறவினர்களிடம் பெரியசாமியின் உடலை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்படைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பெரியசாமியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அதன்பின்  வீட்டின் முன்பு  பந்தல் அமைத்து பெரியசாமியின் உடலானது  உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் குமாரய்யா,  வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி, காவல் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் போன்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அஞ்சலி மற்றும் இறுதி சடங்கை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் கொரோனா தொற்று அதிகம் பரவ அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகளின் முன்னிலையில் பெரியசாமியின் உடலானது  ஆம்புலன்ஸ் மூலம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு விதிமுறை படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது .

Categories

Tech |