Categories
உலக செய்திகள்

“ஆங் சான் சூகி வழக்கு”….. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி க்கு எதிரான புதிய வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்தது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை ராணுவம் கலைத்து ஆட்சியை ஆக்கிரமித்தது. இதில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி இந்த நடவடிக்கையை ராணுவம் செய்தது. இதனையடுத்து அரசின் தலைமை ஆலோசகரும், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவருமான ஆங் சான் சூகி மீது பல வழக்குகளை ராணுவ ஆட்சியாளர்கள் தொடுத்தனர்.

கடந்த ஆண்டு தேர்தலின்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியது, மக்களை போராட்டத்தில் ஈடுபடத் தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்கில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இந்த நிலையில் அரசின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாக்கி-டாக்கிகளை வாங்கியது. ஆகவே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது குறித்து ஆங் சாங் சூகி மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து கடந்த திங்கட்கிழமை அறிவித்தது

Categories

Tech |