திருவாரூரில் எவ்வித இடர்பாடு இன்றி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் ஆன்லைன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆன்லைன் வகுப்புகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் நேரடி தொடர்பில் கல்வி கற்பதனால் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறியுள்ளார் . மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து எந்தவித இடர்பாடுகள் இன்றி மாணவ- மாணவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறியுள்ளார். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நடத்திய ஆன்லைன் அறிவுரையில் 11 பள்ளிகளைச் சேர்ந்த தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.