நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என பாஜக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை தாமதமாக வாழ்த்து சொன்னாலும் அந்த வாழ்த்தினால் சீமான் நெகிழ்ந்து போனதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு @SeemanOfficial அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர் அனைத்து நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ @BJP4TamilNadu சார்பாக மனமார வாழ்த்துகிறோம்.
— K.Annamalai (@annamalai_k) November 8, 2022