Categories
சினிமா தமிழ் சினிமா

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. நீங்களே பாருங்க….!!!

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா மற்றும் லிஜோமால் ஜோஸ். அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படம் ”அன்னபூரணி”. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ இவர்களின் பயணமே இந்த திரைப்படம் ஆகும்.

லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா நடிக்கும் ‛அன்ன பூரணி' Entertainment பொழுதுபோக்கு

குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட படமாக கூறியுள்ளது இந்த திரைப்படம். பாடலாசிரியர் யுகபாரதி இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். ஹெக்டர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |