நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ . இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ,பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது .
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் . இந்நிலையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .