தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சுந்தர் சி சமீபத்தில் லெஜண்ட் சரவணனை சந்தித்து பேசியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் காரணமாக சங்கமித்ரா திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது சுந்தர் சி மற்றும் லெஜெண்ட் சரவணன் வேறொரு காரணத்திற்காக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தை பண்ணப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்துஅதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சுந்தர் சி மற்றும் லெஜெண்ட் சரவணன் சந்திப்பு குறித்த காரணம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.