Categories
அரசியல்

“எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டாரு!”…. தப்பா எடுத்துக்காதீங்க!…. நயினார் கருத்துக்கு வருத்தப்பட்ட அண்ணாமலை….!!!!

தமிழகத்தின் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வேறு ஏதோ பேச வந்துவிட்டு மாற்றி கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூரில் மாணவி தற்கொலை வழக்கில், நீதி கேட்டு பா.ஜ.க சார்பாக வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போன்று அதிமுக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மைத்தனத்தோடு பேசுவதற்கு அ.தி.மு.கவில் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை.

மக்களின் பிரச்சனைகளை ஒருபோதும் அ.தி.மு.க சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது என்று கூறியிருந்தார். இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க வின் தலைவர்களும் நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அவர் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, “சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நயினார் நாகேந்திரன் வேறு ஏதோ சொல்ல வந்து, மாற்றி கூறி விட்டார். இது தொடர்பில் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டேன். அந்த கருத்தில் நயினார் நாகேந்திரனுக்கே உடன்பாடு இல்லை. நயினார் நாகேந்திரன் கூறியது, பா.ஜ.கவின் நிலைப்பாடு கிடையாது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் எந்த வித பிளவும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |