தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது.
அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய பாதுகாப்புக்கு SPG அதிகாரிகள் மட்டும் தான் பொறுப்பு. இந்நிலையில் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அது உள்துறை அமைச்சகத்தின் தவறு. அப்படி இருக்கும்போது அண்ணாமலை தமிழக அரசை எப்படி குறை சொல்லலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அண்ணாமலையின் குற்றசாட்டை பார்க்கும்போது அவருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஏதாவது தகராறாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது என்றும் கூறியுள்ளார்.