Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை: அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ட்விட்.. அப்படி என்ன நடந்துச்சு ?

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கருத்து மோதல்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை ட்விட்டர் மூலம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பாஜகவின் தேசிய இளைஞரணி தலைவர்  தமிழகம் வந்த போது நடந்த சம்பவம் தொடர்பான ஒரு ட்விட் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார்.

அதில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |