செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும், நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை… காவல்துறையில் நடக்க வேண்டியதை… கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ? ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும், உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் உண்டு.
ஆனால் அண்ணாமலையை போன்ற கோமாளித்தனமான அரசியல்வாதிகள், மிகவும் இக்காட்டான வழக்கை… மக்களிடம் போய் விளக்க வேண்டியதும்… அவர்களிடம் போய் சமூக நல்லிணக்கமும் வருவதற்கு தான் ஒரு அரசியல் கட்சி வேலை செய்யணும். ஆனால் அதற்கு மாறாக கோமாளித்தனமாக நாங்கள் பந்த் நடத்துறோம். யாரும் தொழில் செய்யாதீங்க, கடையை திறக்காதீங்க என்று சொன்னால்…
இன்னைக்கு இருக்கக்கூடிய சூழல் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வருகின்ற ஒரு தொழில்நகரமான கோவையில் இனிமே யாரும் தொழில் செய்யாதீங்க என்பது போல்… கோவையை எப்போதும் தன்னுடைய வாக்கு வாங்கி அரசியலுக்காக… பதற்றமாக வைத்திருக்க கூடிய சூழ்நிலையில் அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாத வர்கள் செயல்பாடு மிகவும் வெட்கக்கேடான செயல் என விமர்சித்துள்ளார்.