Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் அதிமுகவில் சசிகலா?”…. பாஜகவின் கருத்து என்ன?…. அண்ணாமலை ஓபன் டாக்….!!!!

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை அசத்தலான பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழக மக்களுக்காக உழைக்க நினைப்பவர்கள் தாராளமாக பதவிக்கு வரலாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாஜக கட்சி சசிகலா விவகாரம் தொடர்பில் அதிமுக தலைவர்களுடன் சமரசம் பேச முயற்சிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாஜக ஒருபோதும் அடுத்த கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்காது. எனவே அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் இடையேயான கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று அண்ணாமலை தெளிவாக கூறிவிட்டார்.

Categories

Tech |