தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு உள்ளிட்ட மற்ற துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதில் முதல் பக்க அறிக்கையில் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்களோடு லிஸ்ட் தொடங்குகிறது. இந்த லிஸ்டில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம் பெறவில்லை.
ஆனால் 2-ம் பக்க அறிக்கையில் உதயநிதியின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கும் நிலையில் ரஜினிகாந்த் முதல் பக்கம் அறிக்கையில் அண்ணாமலையின் பெயரை சேர்த்து விட்டு உதயநிதியின் பெயரை சேர்க்காதது ஏன் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் ரஜினியின் ரசிகர்கள் உதயநிதியை தன்னுடைய கலை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதால் சினிமா துறையில் சேர்த்துள்ளார் என்று விளக்கம் அளித்து வருகிறார்கள்.
மேலும் ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரஜினி தன்னுடைய பேரன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். நேற்று பிறந்த நாளின் போது ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு சென்றபோது லதா ரஜினிகாந்த் ரஜினி வீட்டில் இல்லை என்று சொல்லிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.