2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் மெல்ல மெல்ல மலர்ந்த தாமரை வருகின்ற 2026-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை பூத்து குலுங்க செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அண்ணாமலை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வருகின்ற பொங்கல் அன்று பாஜகவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தலையணை மற்றும் பாயுடன் சென்று அங்குள்ள வீடுகளில் தங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி அண்ணாமலை மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வருகின்ற 15, 16-ஆம் தேதிகளில் தங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் கிராம மக்களுக்கு மாநில அரசின் நலத்திட்டங்கள் வந்து சேர்கிறதா ? மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அங்குள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளதா ? என்று ஆராய உள்ளனர். இந்நிலையில் அண்ணாமலை கையில் எடுத்துள்ள இந்த முயற்சி பாஜக கட்சியை மேன்மேலும் வளர செய்யுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.