Categories
அரசியல்

டிஜிபிக்கே ஆர்டரா…. தெறிக்க விட்ட  அண்ணாமலை…. வேற லெவல் தா போங்க….!!!!

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, காவல்துறை டிஜிபி அதிகாரிக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் சிறுபான்மை இன மக்கள் பாஜகவில் இணைவது குறித்த நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாவது, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று, 3331 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது.

இந்த நிதி கடந்த வருடம் மே மாதம் ஏற்பட்ட பேரிடருக்காக உத்தரகாண்ட் போன்ற 6 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பின் ஏற்பட்ட பேரிடர்களுக்கு தற்போதுவரை நிவாரண நிதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக படிகல்லாக உள்ளது. ஆட்சியில் இல்லாத சமயத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள்.

தற்போது திமுகவினர் பாஜகவில் இருக்கும் 24 நபர்கள் மீது புகார் தெரிவித்து கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டு காவல்துறைக்கென்று தனி கம்பீரம் உள்ளது. அந்த கம்பீரத்தை  அரசியலுக்காக விட்டுக்கொடுக்க கூடாது என்று டிஜிபியிடம் தெரிவித்தேன்.

எனவே, தான் தமிழக காவல்துறை கடமை தவறாது செயல்படவேண்டும் என்று காவல்துறை டிஜிபி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதனை நான் வரவேற்கிறேன் என்றார். அண்ணாமலை, காவல்துறை டிஜிபி-கே உத்தரவு போட்டு, அதனை அவர் ஏற்று அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |