Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலை தம்பி”…. நீங்க CM ஸ்டாலின் குடும்பத்தை பத்தி புத்தகம் எழுதுங்க…. நல்ல விலை‌ போகும்…. அமைச்சர் கீதா ஜீவன் செம கலாய்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி மிகவும் காட்டமாக  பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தனி விமானத்தில் வருவது தவறு கிடையாது. ஆனால் எங்கள் தலைவர் ரயிலில் வந்தால் மட்டும் தவறா?. ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற தோனியில் அண்ணாமலை பேசுகிறார். அண்ணாமலை அரசியலுக்கு வந்து ஒரு வருடமே ஆகும் நிலையில், நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சுயபுராணம் பாடுகிறார்.

நீ எப்படி வேணாலும் இருந்துட்டு போ. ஐபிஎஸ் வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றுதானே இங்கு ஓடி வந்திருக்கிறாய். நான் அரசியலுக்கு வந்து 26 வருடம் ஆகிவிட்டது. நாங்கள் ஒரே கொள்கை பிடிப்போடு இருப்பதால் எதிலும் துணிந்து நிற்போம். நான் தெற்கத்தி பொண்ணு. முதல்வர் மற்றும் அமைச்சர்களை பற்றி அண்ணாமலை பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிடில், நாங்கள் மேடைக்கு ஏறுவோம். அண்ணாமலைக்கு சூடு மற்றும் சொரணை இருந்தால் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முதல்வர், அமைச்சர் உதயநிதி மற்றும் அவருடைய குடும்பத்தினரை பற்றி பொய்யான தகவல்களை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலை தம்பி நீங்கள் உங்கள் கதையை ஒரு புத்தகமாக எழுதுங்கள். அது நல்ல விலைக்கு விற்பனையாகும் என்று காட்டமாக கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தொடர்ந்து அப்படி பேசினால் நாங்கள் எதிர்வினையாக மேடைக்கு ஏறுவோம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |