அரசியல் கட்சி நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது, எங்கோ இருந்து வந்த ஒருவர், குறிப்பாக தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எல்லாம், அடுத்தது நாங்கள்தான், அடுத்தது நாங்கள் தான் என்று சிலபேர் சொல்கிறார்கள். கோயம்புத்தூரிலும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. சாலையில் சென்றார்கள், மறியல் செய்தார்கள், போட்டி போட்டார்கள், பூத்துக்கும் போனார்கள், எல்லாம் செய்தார்கள். நூற்றுக்கு ஜீரோ. அரவக்குறிச்சிகளின் சில பேர் முயற்சி செய்தார்கள்…
ஒன்றியத்தில் இருக்கின்ற உள்துறை அமைச்சரை அழைத்து வந்து ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்தார்கள், வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து பார்த்தார்கள், ஆனால் ரிசல்ட் திரும்பி பார்க்காமல், கர்நாடகாவிற்கு போ என்று சொல்லிவிட்டார்கள். நான் ஒன்று கேட்கிறேன்… தமிழ்நாட்டில் 69 ஆயிரத்துக்கும் மேல் பூத் இருக்கிறது, ஒரு பூத்திருக்கு ஒரு ஆளை அவர்கள் காட்ட முடியுமா? தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு ஆள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
வெற்று விளம்பரம், வெறும் சமூக வலைதளம் மட்டும்தான், சமூக வலைதளம் ஓட்டாக மாறாது. ஓட்டாக மாற வேண்டும் என்றால் உழைக்கணும். ஒன்றிய அரசு சொன்னார்கள்… இலவசம் வேண்டாம் என்று, இலவசங்கள் வேண்டாம் என்று சொல்கின்ற பிஜேபி, ஏன் அவர்கள் தேர்தல் களத்தில் சந்திக்கின்ற போது அந்தந்த மாநிலங்களில் இலவச திட்டங்களை அறிவிக்கணும் ? வாக்குறுதியாக கொடுக்கணும், ஏன் கொடுக்கிறார்கள் ?
மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய… குறிப்பாக தமிழகத்தில் மாண்புமிகு தளபதி அவர்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை பல்வேறு மாநிலங்களில், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சியே தேர்தல் வாக்குறுதிகளாக இங்கே செயல்படுத்தக்கூடிய திட்டங்களை, தமிழகத்தில் தளபதி அவர்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை… வாக்குறுதியாக கொடுக்கிறார்கள். யார் எங்கு வேண்டுமானாலும் வரட்டும், களத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாம்தான் ஜெயிக்கிறோம், நாம் மட்டும் தான் ஜெயிக்கிறோம் என தெரிவித்தார்.