திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் தனிமனித இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.