நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளிப்பார். அதன்படி ஐந்தாம் நாளான நேற்று அலங்கார மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனாக காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருமுறை பாடல் பாடி அம்மனுக்கு 16 வகை தீபாரதனை நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.