Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அண்ணன்-தம்பி இடையே முன்விரோதம்…. சேதமடைந்த நிலம்…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தினால் நிலத்தை சேதப்படுத்திய கணவன்- மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூரை பகுதியில் வரதராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது சொந்த வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருக்கிறார். அதன்பின் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து அடிப்பதற்காக நிலத்திற்கு வரதராஜ் சென்றுள்ளார். அப்போது மக்காச்சோளப் பயிர் எல்லாம் சேதம் அடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மக்காச்சோளம் விதைக்கும் போதே வரதராஜரிடம் அவரது தம்பி தர்மா வயல் நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்திருக்கிறார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பேரில் தர்மாவை காவல்துறையினர் அழைத்து கண்டித்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அண்ணன் தம்பி இடையே முன் விரோதம் இருந்து வந்ததால் தர்மா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து டிராக்டர் மூலமாக உழுது மக்காச்சோள பயிர்களை அழித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக தர்மா மகன் அசோக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கின்ற தர்மா மற்றும் அவரின் மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |