அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது நான்கு டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதற்காக கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஐதராபாத் சென்றுள்ளார்.