அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்நிலையில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு காரணம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பில் ஒரு சிலருக்கு கொரோனா உறுதியானது. இதில் கீர்த்தி சுரேஷின் மேக்கப்மேன் இருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஹைதராபாத்தில் கீர்த்தி சுரேஷ் உடனான காட்சிகள் படமாக்கப்பட்ட போதுதான் ரத்த அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்ததால் தனக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ரஜினி இருந்தாராம் என்ற மாறுபட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ஊடகங்களில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாடு காரணம் கீர்த்தி சுரேஷ்தான் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.