அண்ணிக்கு நடக்கவிருந்த துயரத்தை தனது உயிரை பணயம் வைத்து மைத்துனன் தடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷரதா நகரை சேர்ந்தவர்கள் முன்னா அவரது மனைவி சோனி தேவி. நேற்று வீட்டில் தேவி தனியாக இருந்த நேரத்தில் திடீரென வீட்டிற்குள் வந்த அரவிந்த் மற்றும் சோட்டு என்று இருவர் தேவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அச்சமயத்தில் வீட்டிற்குள் வந்த மைத்துனர் ராமன் மற்றும் மகன் குமார் தேவியிடம் இருவர் தவறாக நடப்பதற்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் இருவரும் சேர்ந்து தேவியை காப்பாற்ற முயன்றனர். அப்போது இராமன் மட்டும் குமாரை தலையில் இரும்பு கம்பிகளால் நோக்கினார்கள் இருப்பினும் தேவியை காப்பாற்ற இருவரும் தனது உயிரை பற்றி கவலை கொள்ளாமல் போராடினார். ஒரு கட்டத்தில் அரவிந்த் மற்றும் சூட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
தலையில் காயமடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் ராமன் மற்றும் குமாரை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் தேவி. ஆனால் அரவிந்த் மற்றும் சேட்டானின் தாய் மற்றும் சகோதரிகள் தேவியை வழிமறித்து பிரச்சினை செய்தனர். அவர்களை சமாளித்த தேவி மருத்துவமனைக்கு சென்றார், அங்கே காயமடைந்த ராமன் மற்றும் குமாருக்கு தலையில் கட்டு போடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் இந்த இரு குடும்பத்தினர் களுக்கிடையே முன்பகை இருப்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.