இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக அகற்றுவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மக்கள் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாமா? என்று அதிக எதிர்பார்ப்புடன் பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவது பாதுகாப்புக்குரியதா? என்று அறிய இந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை போன்ற தகவல்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார்.
அதன்பின்பு வரும் திங்கட்கிழமை அன்று முக்கிய தீர்வு வெளியிடுவதற்கான கூட்டம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களிடம் அந்த தீர்வை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜூலை 5ஆம் தேதி அன்று இரவில் விதிமுறைகளை மொத்தமாக நீக்கும் நிலை தற்போது இல்லை என்று மூத்த அரசு உறுப்பினர்கள் கூறினர். எனினும் நாட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே தற்போது விதிமுறைகள் நீக்குவதற்கு அது பெரிய காரணமாகவுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.