Categories
மாநில செய்திகள்

வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவிப்பு!

வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இணை இயக்குனர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியை மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் செயல்பட்ட கொரோனா முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை. வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவர் விடுதிகளை ஜூன் 11ம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |