வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆன்லைனில் www.tnepass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.ஈரோடு மாவட்டத்திற்கோ அல்லது பக்கத்து மாவட்டதிற்கோ செல்ல மட்டுமே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட முடியும். வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு மாநில அனுமதிச்சீட்டு குழுவினரால் அனுமதி வழங்கப்படும். இணையதள வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள தாலுகா நிலையத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி அனுமதி பெறலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.
இவர்கள் திருமணம் இறுதிச்சடங்கு, மருத்துவ உதவி உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி வழங்க பதிவு செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு பதிவு செய்யும்போது தக்க சான்றிதழ்களை உடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக திருமணத்திற்கு செல்ல விரும்புபவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கும்பட்சத்தில், பத்திரிக்கையை உடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
இறுதிச்சடங்கிற்கு செல்ல விரும்புவோர் இறப்பு சான்றிதழ் அல்லது அருகில் உள்ள நகராட்சி கிராமப்புற அதிகாரிகளின் கையொப்பம் பெற்ற சான்று இணைக்கவேண்டும். மருத்துவ உதவி பெற விரும்புவோர் சமீபத்தில் பயன்படுத்திய பரிசோதனை சீட்டை இணைத்து அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல் வேறு ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல rtos.nonresidenttamil.org என்ற இணையதளம் மூலமும் வெளிமாநிலத்தில் மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தமிழகம் திரும்புவதற்காக rttn.nonresidenttamil.org என்ற இணையதளத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.