Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு ….!!

கொரோனா பொது முடக்கம் அமல் படுத்தப் பட்டதில் இருந்து பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டன. 7 மாதங்கள் ஆகியும் இன்னும் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கை பாதிக்கக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆன்லைன் வழியில் கல்வி சார்ந்த நிகழ்வுகளை மேம்படுத்தி உள்ளனர். மாணவர்களின் மாணவர்களின் கல்வி எந்த சூழலிலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக தேர்வுகள் நடத்தி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது 10, 12 ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதியும், பதினோராம் வகுப்புக்கான துணைத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 29ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் www.dge.tn.gov.in இல் ரிசல்ட் என்பதை  கிளிக் செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு நவம்பர் மூன்றாம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |