Categories
உலக செய்திகள்

இந்தியா செல்லும் தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தல்.. பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிவிப்பு ..!!

பிரிட்டன் அரசு இந்தியாவிற்கு செல்லும் தங்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்திய நாட்டிலிருந்து, பிரிட்டன் செல்லும் பயணிகள், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்துக்கொள்ளவும் வேண்டும் என்று அந்நாடு தெரிவித்திருக்கிறது. எனவே, மத்திய அரசு, இதற்கு பதிலடியாக பிரிட்டன் மக்கள் இந்தியாவிற்கு வந்தால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.

இந்த விதிமுறை நாளையிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசு இவ்வாறு அறிவித்த பின்பு பிரிட்டன் அரசானது, தங்கள் மக்கள் இந்தியா செல்வதற்கான விதிமுறைகளை புதுப்பித்திருக்கிறது.

அதன்படி, தங்கள் மக்கள் இந்தியாவிற்கு சென்றால், தடுப்பூசி பெற்றிருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தியிருக்கிறது. அதன்பின்பு இந்தியாவிற்கு சென்றடைந்த, எட்டாவது நாளில் கொரோனா பரிசோதனை செய்யவும், அதற்கான செலவுகளை மக்களே செய்யுமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.

Categories

Tech |