அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் பொதுத் தேர்வு கால அட்டவணை தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி வெளியிட்ட பின்னர் தான் அறிவிக்கப்படும் என கூறி உள்ளார்
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அச்சமயம் அவர் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு குறித்து பேசியபோது, தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப் பட்ட பின்புதான் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறித்து தகவல் வெளியிடப்படும் என கூறியுள்ளார். அதோடு மலைப்பகுதிகளில் உள்ள தடை நீக்கப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.