Categories
சினிமா மாநில செய்திகள்

விரைவில் மருத்தவ கலந்தாய்வு அறிவிப்பு – மருத்துவ கல்வி இயக்குநர்

தமிழகத்தில் 4 நாட்களில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுமென மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. நீண்ட கால தாமதம் ஆகிக் கொண்டு இருக்கின்ற அதே நேரத்தில் தமிழக அரசாங்கம் இதற்கான அரசாணை வெளியிட்டது. அரசாணை வெளியானதை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.

மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவ கலந்தாய்வு தேதி நான்கு நாட்களில்  அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக எஞ்சினியரிங் அட்மிஷன் தொடங்கி கலந்தாய்வு முடிந்து 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.  அதேபோல் நீட்தேர்வும் 4 மாதம் காலதாமதமாக நடத்தப்பட்ட சூழ்நிலையில் இன்னும் நேரம் தாமதமாகிவிட கூடாது என இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |