தமிழ்நாட்டின் புதிய சின்னமாக “தமிழ் மறவன் பட்டாம்பூச்சி” அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம் , வரையாடு , மரகதப்புறா,செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. அந்த வகையில் தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை மற்றொரு சின்னமாக அறிவிக்க வேண்டுமென,
முதுமை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரியல் பாதுகாவலர் ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர் . இதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சம்புக் க்ளோலிக்கர் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழ் நாட்டின் சின்னமாக அறிவிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.