மும்பையில் மதுபான கடைகளை மூட மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கலாம் என அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். அதன்படி,
பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், மும்பையில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று உள்ளது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால், முக்கிய வணிக நகரமாக இருந்த மும்பை நோய் நகரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.