சென்னையில் கொரோனா தொற்றால் மேலும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 2 முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் என மொத்தம் 21 பேர் இன்று காலை நிலவரப்படி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 41,172 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 601 பேர் உயிரிழந்துள்ளனர். கடத்த 6 நாட்களில் சென்னையில் 179 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 22,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் 17,683பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.