‘வானத்தைப்போல’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குகென்ற தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”வானத்தைப் போல”. அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவர்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமாரும் விலகுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.