Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுங்க… மர்ம கும்பலின் கொடூர செயல்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கட்டிட காண்டிராக்டரை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் கட்டிட காண்டிராக்டரான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 12 – ஆம் தேதியன்று கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் தாக்கி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்துள்ளனர்.

அதன்பிறகு வாகைக்குளம் பகுதியில் வசிக்கும் நல்லமுத்து, சங்கிலிபூதத்தார், குரு சச்சின் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவந்திப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அதிசயபாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |