மிசோரின் ஆளுநராக கேரள மாநிலத்தின் பாஜக தலைவர் பி.எஸ்.பி.ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்று வெளியானது. அதில் கேரள மாநிலத்தின் பாஜக தலைவரான பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை மிசோரின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் லடாக்கின் துணை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் என்பவரும்,
ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக கிரிஷ் சந்திர என்பவரும், கோவாவின் ஆளுநராக ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யகோபால் என்பவரும் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.