Categories
மாநில செய்திகள்

“அகவிலைப்படி உயர்வு” தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி….!!

தமிழக  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அக்டோபர் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக கூறினார். அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்த பட்டதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 60 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for அகவிலைப்படி உயர்வு

இந்த அகவிலைப்படி உயர்வானது  ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசும் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்த்தியதால் அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |